http://www.tamilvishai.com/home/?p=26373
Wednesday, June 16, 2010
Friday, June 11, 2010
கலையிசைப் பெருவிழா 2010 பெரு வெற்றி
கலாநிதி கல்லாறு சதீஷ் தலைமை தாங்கிய வசீகரஸ்வரங்களின் கலையிசைப் பெருவிழா 2010 பெரு வெற்றி.
சுமார் 750 மக்கள் பங்கேற்பு.
மங்கள விளக்கு,கலாநிதி கல்லாறு சதீஷ்,திரு. வண்ணைத்தெய்வம்,திரு.ரவிமாஸ்ரர்,திரு.சசி ஐயா,திரு.வெற்றிமயில்நாதன்,ஆகியோரினால் ஏற்றப்பட,வலியுற்றோம் கண்ணீராஞ்சலி கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களினால் வழிநடத்தப்பட, கண்ணீராஞ்சலியில்,
கனவுகள் அழிக்கப் பட்ட மனிதர்களை,எம்மைப் போல் வாழ ஆசைப்பட்ட மனிதர்களை,நிற்கதி வேளை ஒன்றிலே கண்மூடிப்போன உறவுகளை,இப்பொழுது நினைவு கொள்கிறோம்.
எமது தேசத்திலே சூறாவளியால் ,சுனாமியால்,போரினால் உயிரிழந்து போன அனைத்து உறவுகளையும்
இப்பொழுது நினைவு கொள்கிறோம்.
எனது வேளை முடிகிறதே என்று கதறி, அழுது, துடித்த,அந்த உறவுகளை இப்பொழுது நினைவு கொள்கிறோம்.
அந்த மலர்ச்சிக்குரிய இனிய ஆத்மாக்களுக்கு எமது இதயாஞ்சலியைத் வணங்கி, வழங்குகிறோம்.
அவர்களின் ஆத்மா சாந்தியடைய இவ்வேளையில் வேண்டுகிறோம்.
எல்லோரும் எழுந்து நின்று சில நிமிடங்கள் அவர்களுக்காக மெளனாஞ்சலி செய்வோம்.
சோக இசை பரவி அஞ்சலி நிறைவுற்றது.
பரத தர்சனா நடனாலய மாணவிகளின் வரவேற்பு நடனம்,சலங்கை நர்த்தனாலய மாணவர்களின் நடனங்கள்,சிறுவர் திரையிசை நடனங்கள்,இளையோர் மேற்கிசை நடனங்கள்,காட்சியும் கானமும்,என்னும்
நிகழ்வுகளுடன் வசீகரஸ்வரங்கள் இசை மன்றத்தின் இனிய இசை வேளை மனதை நிறைத்தது.
உதவும் உறவுகள் திரு.வெற்றிமயில்நாதன் அவர்களின் சிறப்புரை மனதைப் பிழிந்தது,கல்வி இழந்த உறவுகளுக்கு நேரடியாக பணவுதவி செய்யும் அமைப்பை நடாத்திவரும் திரு.வெற்றிமயில்நாதன் அவர்களுக்கு, கலாநிதி கல்லாறு சதீஷ் மலர்ச் செண்டு கொடுத்துப் பாராட்டினார்.
ஈரிஆர் சுவிஸ் கலையகம்,வசீகரஸ்வரங்கள் இசை மன்றம் நடாத்திய இந்த விழாவில் கலாநிதி கல்லாறு சதீஷின் இலாபமையம் என்னும் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் நான்காவதாண்டு சிறப்பு நிகழ்வு மிகச்சிறப்பாக
இடம்பெற்றது.
ஜெனராலி நிறுவனத்தின் லுசேர்ன் பிரதிநிதி திரு. மார்க் கிளாவுஷர்,ஹெல்சானா நிறுவனத்தின் லுசேர்ன் மாநிலத் தலைவர் திரு.மார்க்கோ மையர்,மட்லி இன் லவ் என்னும் திரைப்படத்தின் திரைக்கதையாசிரியை
ஏவா வித்ஜா,திரு.வண்ணைத்தெய்வம்,திரு.ரவி மாஷ்ரர் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில்,
கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் வெற்றிகரமான பணிகளைப் பாராட்டிய ஹெல்சானா நிறுவனத்தின் லுசேர்ன் மாநிலத் தலைவர் திரு.மார்க்கோ மையர் அவர்கள்,கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களுக்கு
விசேட தகுதிச் சான்றிதழ் வழங்கியதுடன்,கலாநிதி கல்லாறு சதீஷ் மக்களுக்காகப் பணியாற்றும் மிகச்சிறந்த தகுதியாளர் என்று பாராட்டினார்.
கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் வெற்றிகரமான பணிகளைப் பாராட்டிய ஜெனராலி நிறுவனத்தின் லுசேர்ன் பிரதிநிதி திரு. மார்க் கிளாவுஷர் அவர்கள்,கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் மிகத் திறமை வாய்ந்த மக்கள் ஆலோசனை முறைகளினால்,அவருடைய இலாபமையம் என்னும் நிறுவனம்,ஜெனராலி நிறுவனத்தின் ஒப்பிசியல் பாட்னர் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றார்.
கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் வெற்றிகரமான பணிகளைப் பாராட்டிய மட்லி இன் லவ் என்னும் திரைப்படத்தின் திரைக்கதையாசிரியை
ஏவா வித்ஜா,கலாநிதி கல்லாறு சதீஷ் மற்றும் அவருடைய மனைவி மட்டும் இல்லையெனில்,மட்லி இன் லவ்
என்னும் திரைப்படத்தின் கதை உருவாகியிருக்கமாட்டாது.ஏழு ஆண்டுகளாக பரீட்சயம் கொண்ட கல்லாறு சதீஷின் வாழ்க்கையை வெற்றி பெற்ற இளைஞன் எனும் பெயரில் திரைப்படமாக்கவேண்டுமென்னும் நோக்கத்திலுள்ளோம் என்று உரையாற்றினார்.
கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் இலாபமையம்,கலைக்காவலர் திரு வண்ணைத்தெய்வம் அவர்களுக்கு
மனிதருள் என்னும் பட்டம் வழங்கியதுடன்,தனது நிறுவனத்தின் இலக்கிய ஊக்குவிப்பு நிதியிலிருந்து 1000 சுவிஷ் பிராங்குகளைப் பணமுடிப்பாக வழங்கிக் கெளரவித்தது.அத்துடன் 300 ஈழத்துக்கலைஞர்கள் என்னும்
நூலறிமுகமும்,திரு.ரவி மாஷ்ரர் அவர்களால் செய்யப்பட்டது.நூற் பிரதிகளை மனிதருள் வண்ணைத்தெய்வத்திடமிருந்து,ஏஎம்ஸ் சதிஸ்,சசி ஐயா,அருளானந்தம் ஆசிரியர்,வை.ஆர்.ஐ.யோகன்,லெபரா மதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் பங்கு பற்றிய பிரமுகர்களுக்கு கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் இலாபமையம்,நினைவுக்கேடயங்களை வழங்கிக் கெளரவித்தது.
ஈரிஆர் வானொலி இயக்குனர்கள் திரு.திருமதி. ரவிமாஷ்ரர் தம்பதியினரும்,திருமதி.ஞானச்சந்துரு சுமித்ராவும் நிகழ்சிகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.
லுசேர்ன் மோகனின் அறு சுவை உணவும்,வை.ஆர்.ஐ. யோகனின் இனிப்புக்கடையும் மிகுந்த மகிழ்ச்சியைப்
பெற்றதானது மக்கள் வரவின் மிச்சமாகப்பேசப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வசி மற்றும் வசீகரஸ்வரங்கள் இசை மன்றம் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
நீண்ட காலத்தின் பின்னர் ,கண்ணீராஞ்சலி ,இசையாஞ்சலி,நடனாஞ்சலி,அறிவாஞ்சலி என ஐம் புலங்களும்
நிறைந்த விழாவில் கலந்து கொண்ட திருப்தியுடன் மக்கள் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வீடு திரும்பினர்.
ஆக்கம் Dr.கல்லாறு சதீஷ் at 11:13 PM 0 comments