Thursday, October 7, 2010

புரிதலின் வலியது

புரிதலின் வலியது (சிறுகதை)

அவன் எப்பொழுதுமே பெண்களின் ஆடைகளையே அணிந்திருப்பான்.
ஏனென்று எனக்குப் புரிவதேயில்லை.
அந்த ஆடைகள் நவீனமாகவுமிருக்கும்,அது அவனுக்கு மிக அழகானதாகவுமிருக்கும்,
ஆனால்,
அவனேன் பெண்ணாடையணிகிறானேன்பதே எனது கேள்வியாகத் துரத்துகிறது.
அதை அவனிடம் கேட்கவோ,விளக்கம் பெறவோ நான் முயலவில்லை.
இதைப் பற்றிப் பலரிடம் நான் சொல்லியுள்ளேன்.
சிலர் சொன்னார்கள்,அவனின் காதலி இறந்திருக்கலாம்,
அதனால் அவளின் ஆடைகளை
அவன் அணிந்து வாழலாம்.
சில வேளை அவன் பைத்தியமாக இருக்கலாம்.
கண்ணீர் அஞ்சலியொன்றில் அவன் மரணமானதாக அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
மலர்வு 10.10.1990,பிரிவு 07.10.2010,நடராசா திவ்யா என்றிருந்தது.
திவ்யா ஆண் பெயரா பெண் பெயரா எனச் சந்தேகம் வந்தது.
அவனின் மரணச் சடங்கு நடக்கும் இடத்துக்கு ஒடிச் சென்றேன்.
அது அவன் அல்ல அவள் என்று அப்போதுதான் புரிந்து கொண்டேன்.

கல்லாறு சதீஷ் 07.10.2010

Wednesday, September 22, 2010

இன்னும் 20 ஆண்டுகளில் 2 லட்சமாக உயரும்

கல்லாறு சத்திஷ் (சுவிட்சர்லாந்து): இருபது ஆண்டுகளுக்கு முன், பெருமளவு தமிழ்க் குடும்பங்கள் அங்கு சென்றபோது, கடுங்குளிர், ஜெர்மானிய மொழி தெரியாததால் ஏற்பட்ட பிரச்னை, உணவுப் பிரச்னை, பொருளாதாரப் பிரச்னை, உறவுகளை இழந்ததால் ஏற்பட்ட வேதனை என பல வகையான பிரச்னைகளுக்கு உள்ளானோம். ஆனாலும், 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியையும், அது கற்றுத்தந்த மரபும் எங்களுக்கு உதவியது. கடும் உழைப்பால் இன்றைக்கு நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளோம். பேருந்து நிலையத்தில் தமிழர்கள் காத்திருந்த நிலை மாறி, இப்போது எல்லோரும் சொந்த வாகனங்கள் வைத்துள்ளோம். சொந்த வீடுகள் வாங்கத் துவங்கியுள்ளோம். பல்வேறு தேசங்களிலிருந்து வந்த பல இனத்தவரிடமிருந்து நல்ல மரபுகளை கற்றுக் கொண்டு, நம்முடைய நல்ல மரபுகளை அவர்களுக்கும் கற்றுத் தந்திருக்கிறோம். இப்போது எல்லா இனங்களையும் விட, சுவிஸ் தமிழ்ச் சமுதாயம் ஒரு படி மேலே உயர்ந்திருக்கிறது. இப்போது அங்கு மக்கள் பிரதிநிதியாகும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது. அங்கு 50 ஆயிரம் பேராக உயர்ந்துள்ள தமிழர்களின் எண்ணிக்கை, இன்னும் 20 ஆண்டுகளில் 2 லட்சமாக உயரும். கடல் கடந்து சாதித்த தமிழர்களுக்காக பெருமைப்படுவதோடு, கடல் கடக்க முடியாத தமிழர்களின் கண்ணீரையும் நாம் துடைக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கிடையே தொடர்புப் பாலத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயலவேண்டும்.

Saturday, August 7, 2010

கவிதை பூக்க‌ளைப் பிர‌ச‌விக்கிற‌து



இறைவா
எனது கவிதை
இப்போது இரத்தம்
கொட்டுகிறது.

என்னைவிட இவ்வுலகில்
சோக மனிதன்
இல்லையே!

இதோ
இப்போதே
என்னை அழித்து
விடுதலை பெற முனைகிறேன்.

முதலில் பைத்தியமாகிறேன்
முடிவில் மையமாகிறேன்.
நிஜங்கள் நெருப்பிலிடப்படுவதால்
இதோ எனக்கே நெருப்பிடுகிறேன்.

என்னை வதைக்க‌
எனக்கு உரிமையுண்டா
என்னைக் கொல்ல‌
எனக்கு உரிமையுண்டா
யாரைக் கேட்பேன்
நீதி செத்த மனிதம்
எனக்கு என்னதான்
பதிலிடும்.

உலகில் சத்தியவான்கள்
சத்தியமாகவே உள்ளனர்தான்
அவர்தான் தனக்கே
தீயிட்டுக் கொள்வார்களோ?

சத்தியமே
நீதியின் தராசில்
நடுமுள்ளாய் நின்ற‌
மாணிக்க‌மே
நில்.....

உன்னைச் சுட‌க் கொடுக்கும்
நெருப்பை
என்னிட‌ம் தா
உன‌க்காக‌ நான் எரிவேன்
இப்போதில்லை
எல்லா நெருப்புக்க‌ளையும்
சேக‌ரித்த‌பின் எரிவேன்.

இறைவா
எனது க‌விதை
இப்போது
பூக்க‌ளைப் பிர‌ச‌விக்கிற‌து

Tuesday, July 13, 2010

இதிகாசக் கவி கவிப்பேரரசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எமதினிய கவிப்‍‍‍பேரரசே
பிர‌வாகிக்கிற‌து வாழ்த்துக்க‌ள்.

த‌மிழில் இதுவ‌ரை தோன்றிய‌
க‌விதைக‌ள் அனைத்துக்கும்
ம‌குட‌ம் க‌விப்பேரர‌சு க‌விதைக‌ளே
மர‌ங்க‌ளைப் பாடுவேன் போதும்
மறு வார்த்தையே வேண்டாம்.

க‌விப்பேர‌ர‌சு த‌மிழின் வைர‌ம்
ப‌ழ‌கும் போது ப‌ட்டுத் தெறிக்கும்
ஒளியே வ‌ழியானால்
தாயொளியின் ச‌க்தி முடிவிலிதான்.
.
வான‌ம் என‌க்கொரு போதிம‌ர‌ம்....
இன்னும் பிர‌ஞ்ச‌ வெளியிலிருந்து
சூட்சும‌ அலையிலிருந்து
ப‌றித்தெடுக்கும் க‌னிக‌ளாய்
நெற்றிக்க‌ண் க‌வ‌னிக்கும்
உல‌க‌த்த‌மிழ‌ர்க‌ள்.

செம்மொழி மாநாட்டு நாட்க‌ளில்
தாய் போலென்னைக் க‌வ‌னித்த‌ அன்பைத்
தன்னுடனே அழைத்து வந்திட்ட அக்கறையை
இனி இத‌ய‌ம் நிற்கும் வ‌ரை ம‌ற‌வேன்.

க‌விஞ‌ர்க‌ள் திருநாள் பெருநாளாக‌ வெற்றி பெற‌
த‌மிழில் தோன்றிய‌ த‌லைக் க‌வியே
உல‌கில் தோன்றிய‌ உன்ன‌த‌ க‌வியே
உள்ள‌த்துக்குள்ளிருந்து ஊற்றாய்ப்
பிர‌வாகிக்கிற‌து வாழ்த்துக்க‌ள்.

என்றும் க‌னிந்த‌ அன்புட‌ன்
டாக்ட‌ர் க‌ல்லாறு ச‌தீஷ்
13.07.2010,சுவிற்ச‌ர்லாந்து

Wednesday, June 16, 2010

http://www.tamilvishai.com/home/?p=26373

Friday, June 11, 2010

கலையிசைப் பெருவிழா 2010 பெரு வெற்றி

கலாநிதி கல்லாறு சதீஷ் தலைமை தாங்கிய வசீகரஸ்வரங்களின் கலையிசைப் பெருவிழா 2010 பெரு வெற்றி.
சுமார் 750 மக்கள் பங்கேற்பு.

மங்கள விளக்கு,கலாநிதி கல்லாறு சதீஷ்,திரு. வண்ணைத்தெய்வம்,திரு.ரவிமாஸ்ரர்,திரு.சசி ஐயா,திரு.வெற்றிமயில்நாதன்,ஆகியோரினால் ஏற்றப்பட,வலியுற்றோம் கண்ணீராஞ்சலி கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களினால் வழிநடத்தப்பட, கண்ணீராஞ்சலியில்,
க‌ன‌வுக‌ள் அழிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளை,எம்மைப் போல் வாழ‌ ஆசைப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளை,நிற்க‌தி வேளை ஒன்றிலே க‌ண்மூடிப்போன‌ உற‌வுக‌ளை,இப்பொழுது நினைவு கொள்கிறோம்.
எம‌து தேச‌த்திலே சூறாவ‌ளியால் ,சுனாமியால்,போரினால் உயிரிழ‌ந்து போன‌ அனைத்து உற‌வுக‌ளையும்
இப்பொழுது நினைவு கொள்கிறோம்.
என‌து வேளை முடிகிற‌தே என்று க‌தறி, அழுது, துடித்த‌,அந்த‌ உற‌வுக‌ளை இப்பொழுது நினைவு கொள்கிறோம்.
அந்த‌ ம‌ல‌ர்ச்சிக்குரிய‌ இனிய‌ ஆத்மாக்க‌ளுக்கு எம‌து இத‌யாஞ்ச‌லியைத் வ‌ண‌ங்கி, வ‌ழ‌ங்குகிறோம்.
அவ‌ர்க‌ளின் ஆத்மா சாந்திய‌டைய‌ இவ்வேளையில் வேண்டுகிறோம்.
எல்லோரும் எழுந்து நின்று சில‌ நிமிட‌ங்கள் அவர்களுக்காக மெள‌னாஞ்ச‌லி செய்வோம்.
சோக இசை பரவி அஞ்சலி நிறைவுற்றது.
பரத தர்சனா நடனாலய மாணவிகளின் வரவேற்பு நடனம்,சலங்கை நர்த்தனாலய மாணவர்களின் நடனங்கள்,சிறுவர் திரையிசை நடனங்கள்,இளையோர் மேற்கிசை நடனங்கள்,காட்சியும் கானமும்,என்னும்
நிகழ்வுகளுடன் வசீகரஸ்வரங்கள் இசை மன்றத்தின் இனிய இசை வேளை மனதை நிறைத்த‌து.
உதவும் உறவுகள் திரு.வெற்றிமயில்நாதன் அவர்களின் சிறப்புரை மனதைப் பிழிந்தது,கல்வி இழந்த உறவுகளுக்கு நேரடியாக பணவுதவி செய்யும் அமைப்பை நடாத்திவரும் திரு.வெற்றிமயில்நாதன் அவர்களுக்கு, கலாநிதி கல்லாறு சதீஷ் மலர்ச் செண்டு கொடுத்துப் பாராட்டினார்.
ஈரிஆர் சுவிஸ் க‌லைய‌க‌ம்,வ‌சீக‌ர‌ஸ்வ‌ர‌ங்க‌ள் இசை ம‌ன்ற‌ம் நடாத்திய‌ இந்த‌ விழாவில் க‌லாநிதி க‌ல்லாறு ச‌தீஷின் இலாப‌மைய‌ம் என்னும் ச‌மூக‌ மேம்பாட்டு நிறுவ‌ன‌த்தின் நான்காவ‌தாண்டு சிற‌ப்பு நிக‌ழ்வு மிக‌ச்சிற‌ப்பாக‌
இட‌ம்பெற்ற‌து.
ஜென‌ராலி நிறுவ‌ன‌த்தின் லுசேர்ன் பிர‌திநிதி திரு. மார்க் கிளாவுஷ‌ர்,ஹெல்சானா நிறுவ‌ன‌த்தின் லுசேர்ன் மாநில‌த் த‌லைவ‌ர் திரு.மார்க்கோ மைய‌ர்,ம‌ட்லி இன் ல‌வ் என்னும் திரைப்ப‌ட‌த்தின் திரைக்க‌தையாசிரியை
ஏவா வித்ஜா,திரு.வண்ணைத்தெய்வ‌ம்,திரு.ர‌வி மாஷ்ர‌ர் ஆகியோர் க‌ல‌ந்து கொண்ட‌ இந்த‌ நிக‌ழ்வில்,
கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் வெற்றிகரமான பணிகளைப் பாராட்டிய ஹெல்சானா நிறுவ‌ன‌த்தின் லுசேர்ன் மாநில‌த் த‌லைவ‌ர் திரு.மார்க்கோ மையர் அவர்கள்,கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களுக்கு
விசேட தகுதிச் சான்றிதழ் வழங்கியதுடன்,கலாநிதி கல்லாறு சதீஷ் மக்களுக்காகப் பணியாற்றும் மிகச்சிறந்த தகுதியாளர் என்று பாராட்டினார்.
கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் வெற்றிகரமான பணிகளைப் பாராட்டிய ஜென‌ராலி நிறுவ‌ன‌த்தின் லுசேர்ன் பிர‌திநிதி திரு. மார்க் கிளாவுஷர் அவர்கள்,கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் மிகத் திறமை வாய்ந்த மக்கள் ஆலோசனை முறைகளினால்,அவருடைய இலாபமையம் என்னும் நிறுவனம்,ஜென‌ராலி நிறுவ‌ன‌த்தின் ஒப்பிசியல் பாட்னர் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றார்.
கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் வெற்றிகரமான பணிகளைப் பாராட்டிய ம‌ட்லி இன் ல‌வ் என்னும் திரைப்ப‌ட‌த்தின் திரைக்க‌தையாசிரியை
ஏவா வித்ஜா,கலாநிதி கல்லாறு சதீஷ் மற்றும் அவருடைய மனைவி மட்டும் இல்லையெனில்,ம‌ட்லி இன் லவ்
என்னும் திரைப்ப‌ட‌த்தின் க‌தை உருவாகியிருக்க‌மாட்டாது.ஏழு ஆண்டுக‌ளாக‌ ப‌ரீட்ச‌ய‌ம் கொண்ட‌ க‌ல்லாறு ச‌தீஷின் வாழ்க்கையை வெற்றி பெற்ற‌ இளைஞ‌ன் எனும் பெய‌ரில் திரைப்ப‌ட‌மாக்க‌வேண்டுமென்னும் நோக்க‌த்திலுள்ளோம் என்று உரையாற்றினார்.
கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் இலாபமையம்,கலைக்காவலர் திரு வண்ணைத்தெய்வம் அவர்களுக்கு
மனிதருள் என்னும் பட்டம் வழங்கியதுடன்,தனது நிறுவனத்தின் இலக்கிய ஊக்குவிப்பு நிதியிலிருந்து 1000 சுவிஷ் பிராங்குகளைப் பணமுடிப்பாக வழங்கிக் கெளரவித்தது.அத்துடன் 300 ஈழத்துக்கலைஞர்கள் என்னும்
நூலறிமுகமும்,திரு.ரவி மாஷ்ரர் அவர்களால் செய்யப்பட்டது.நூற் பிரதிகளை மனிதருள் வண்ணைத்தெய்வத்திடமிருந்து,ஏஎம்ஸ் சதிஸ்,சசி ஐயா,அருளானந்தம் ஆசிரியர்,வை.ஆர்.ஐ.யோகன்,லெபரா மதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந் நிகழ்வில் பங்கு பற்றிய பிரமுகர்களுக்கு கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் இலாபமையம்,நினைவுக்கேடயங்களை வழங்கிக் கெளரவித்தது.
ஈரிஆர் வானொலி இயக்குனர்கள் திரு.திருமதி. ரவிமாஷ்ரர் தம்பதியினரும்,திருமதி.ஞானச்சந்துரு சுமித்ராவும் நிகழ்சிகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.
லுசேர்ன் மோகனின் அறு சுவை உணவும்,வை.ஆர்.ஐ. யோகனின் இனிப்புக்கடையும் மிகுந்த மகிழ்ச்சியைப்
பெற்றதானது மக்கள் வரவின் மிச்சமாகப்பேசப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வசி மற்றும் வசீகரஸ்வரங்கள் இசை மன்றம் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
நீண்ட கால‌த்தின் பின்னர் ,கண்ணீராஞ்சலி ,இசையாஞ்சலி,நடனாஞ்சலி,அறிவாஞ்சலி என ஐம் புலங்களும்
நிறைந்த விழாவில் கலந்து கொண்ட திருப்தியுடன் மக்கள் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வீடு திரும்பினர்.

Monday, April 26, 2010

Schweiz lebenden tamilischen Schriftsteller, Arulrasa Nageswaran (Kallaru Satheesh)

Regisseurin Anna Luif über den Film
MADLY IN LOVE ist mein zweiter Spielfilm. Wir haben fünf Jahre daran gearbeitet und nun ist er endlich da. Die Arbeit war ein riesiges Abenteuer, mit Ups und Downs, viel Spass und Freude, aber auch Strapazen und Hindernissen. Tamilen in der Schweiz, Recherchen Als die Autorin Eva Vitija und ich mit dem Drehbuch begannen, wussten wir nicht viel über die tamilische Kultur. Bald schon haben wir mit dem in der Schweiz lebenden tamilischen Schriftsteller, Arulrasa Nageswaran (Kallaru Satheesh), und seiner Frau Kontakt aufgenommen. Sie haben uns mit der tamilischen Gemeinde in der Schweiz bekannt gemacht. In unzähligen Interviews mit Tamilen aus allen Altersgruppen und Schichten wurde uns diese reiche Kultur immer vertrauter. Wir haben – meist als einzige Weisse - tamilische Feste, Fussballturniere, Gesangswettbewerbe und Hochzeiten besucht. Somit haben wir eine Tür zu einer uns völlig unbekannten Kultur aufgestossen und wurden dafür reichlich belohnt. Wir haben in unserem Land die Welt des Hinduismusʻ entdeckt, die in den Tempeln existiert, meist versteckt in Schweizer Industriequartieren, farbig und aufregend. Wir haben ungläubig an Volksfesten teilgenommen, wo sich junge Männer dicke Haken durch die Haut stossen. Wir haben erfahren, dass junge Tamilen der zweiten Generation fast ausschliesslich Tamilinnen heiraten und dass auf alle Fälle die Kaste stimmen muss. Wir haben gelernt, dass alle tamilischen Schüler nicht nur in die Schweizer, sondern auch in die tamilische Schule gehen, wo Sprache und Kultur gelehrt werden. Man hat uns auch an rein tamilische Fussballturniere und an europäisch tamilische Gesangswettbewerbe geschickt. So hat sichuns während der Recherchen eine vielfältige, lebendige und eigenständige Kultur innerhalb unseres Landes eröffnet.


Meine Geschichte

Ich habe mich immer wieder gefragt, warum genau ich einen Film zu diesem Thema machen möchte. Bis es mir – als wir schon längst an der Arbeit zum Drehbuch waren – plötzlich völlig klar wurde. Auch meine Eltern und Grosseltern sind als politische Flüchtlinge in die Schweiz gekommen. Sie sind 1956 aus Ungarn geflüchtet. Auch sie mussten ihre Heimat und ihre Freunde von einem Tag auf den anderen verlassen und konnten erst Jahre später (als sie schon den Schweizer Pass hatten) wieder nach Ungarn einreisen. Auch sie lebten im Exil, hatten Familienmitglieder in der Revolution verloren und mussten sich in der Schweiz eine neue Existenz aufbauen. Wenn auch aus ganz anderen Gründen, sind die Tamilen aus Sri Lanka heute in der gleichen Lage wie meine Familie damals in den 50er-Jahren. Die Konflikte, die durch eine Entwurzelung entstehen können, das Zwischen-den-Kulturen- Stehen, die schmerzlichen Gefühle der Einsamkeit, das Nicht-dazu-Gehören und das sich- behaupten-Müssen (auch im Namen der Eltern) kannte ich aus dem eigenen Elternhaus. Dieses Verlorensein, die fehlende kulturelle Zugehörigkeit, hatten auch mich, neben der Bereicherung eine zweite Sprache sprechen zu lernen, jahrelang beschäftigt. Und so bildet,zusätzlich zum üblichen Generationenkonflikt, wohl die Tatsache, zwei kulturelle Hintergründe zu haben, die thematische Basis für diesen Film.


Allein mit dem Vater

Und noch etwas habe ich mit Devan, der Hauptperson im Film, gemeinsam: Ich bin ab meinem elften Lebensjahr jeweils ein Jahr bei meiner Mutter und ein Jahr bei meinem Vater aufgewachsen. Hin- und her bis 19. Meine Schwester war jeweils beim anderen Elternteil. Ich kenne das Gefühl dieser speziellen Beziehung, der Zweisamkeit mit dem einen Elternteil, das einen stärker miteinander konfrontiert und gleichzeitig Vermischung und Abhängigkeit fördert. Denn es fehlt der Kontext der Familie.


Die Macht der Liebe

Diesen zum Teil sehr schmerzhaften Gefühlen, steht eine grosse Macht entgegen. Die Macht der Liebe. Sich zu verlieben hat eine unglaubliche Kraft. Etwas, von dem wir nicht mal genau wissen was es ist, kann unser Leben für immer verändern und uns in komplett neue Bahnen werfen. Ich glaube, dass zwei Menschen füreinander wegweisend sein können, dass die Liebe und Beziehungen für die eigene Entwicklung das Allerwichtigste sind. Nur wenn wir jemanden aufrichtig lieben, können wir unsrichtig entfalten.


Bollywood, Freude, Feelgood

Seit ich auf einer Indienreise in den 90er-Jahren das Bollywood Kino kennengelernt habe, bin ich ein grosser Fan dieser Filme. Nicht nur die Musik- und Tanzszenen – die ich natürlich das Allergrösste finde – und die Bildgewalt des Bollywood- oder Kollywoodkinos, faszinieren mich, sondern auch die Freude und Emotionalität, mit der die Geschichten erzählt werden. Eine Geschichte muss alle „Säfte des Lebens“ (Rasas) beinhalten: Trauer, Freude, Heldentum, Zorn, das Komische, Mut, Eros, etc. In diesem Sinne ist unser Film ein Feelgood-Movie, ein romantisches Märchen, welches die Zuschauer in leichter Stimmung – love is in the air – aus dem Kino entlässt.