Saturday, August 7, 2010

கவிதை பூக்க‌ளைப் பிர‌ச‌விக்கிற‌து



இறைவா
எனது கவிதை
இப்போது இரத்தம்
கொட்டுகிறது.

என்னைவிட இவ்வுலகில்
சோக மனிதன்
இல்லையே!

இதோ
இப்போதே
என்னை அழித்து
விடுதலை பெற முனைகிறேன்.

முதலில் பைத்தியமாகிறேன்
முடிவில் மையமாகிறேன்.
நிஜங்கள் நெருப்பிலிடப்படுவதால்
இதோ எனக்கே நெருப்பிடுகிறேன்.

என்னை வதைக்க‌
எனக்கு உரிமையுண்டா
என்னைக் கொல்ல‌
எனக்கு உரிமையுண்டா
யாரைக் கேட்பேன்
நீதி செத்த மனிதம்
எனக்கு என்னதான்
பதிலிடும்.

உலகில் சத்தியவான்கள்
சத்தியமாகவே உள்ளனர்தான்
அவர்தான் தனக்கே
தீயிட்டுக் கொள்வார்களோ?

சத்தியமே
நீதியின் தராசில்
நடுமுள்ளாய் நின்ற‌
மாணிக்க‌மே
நில்.....

உன்னைச் சுட‌க் கொடுக்கும்
நெருப்பை
என்னிட‌ம் தா
உன‌க்காக‌ நான் எரிவேன்
இப்போதில்லை
எல்லா நெருப்புக்க‌ளையும்
சேக‌ரித்த‌பின் எரிவேன்.

இறைவா
எனது க‌விதை
இப்போது
பூக்க‌ளைப் பிர‌ச‌விக்கிற‌து

1 comments:

Thenammai Lakshmanan said...

எப்போது்ம் பூக்களையே பிரசவிக்கட்டும் சதீஷ்