கல்லாறு சத்திஷ் (சுவிட்சர்லாந்து): இருபது ஆண்டுகளுக்கு முன், பெருமளவு தமிழ்க் குடும்பங்கள் அங்கு சென்றபோது, கடுங்குளிர், ஜெர்மானிய மொழி தெரியாததால் ஏற்பட்ட பிரச்னை, உணவுப் பிரச்னை, பொருளாதாரப் பிரச்னை, உறவுகளை இழந்ததால் ஏற்பட்ட வேதனை என பல வகையான பிரச்னைகளுக்கு உள்ளானோம். ஆனாலும், 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியையும், அது கற்றுத்தந்த மரபும் எங்களுக்கு உதவியது. கடும் உழைப்பால் இன்றைக்கு நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளோம். பேருந்து நிலையத்தில் தமிழர்கள் காத்திருந்த நிலை மாறி, இப்போது எல்லோரும் சொந்த வாகனங்கள் வைத்துள்ளோம். சொந்த வீடுகள் வாங்கத் துவங்கியுள்ளோம். பல்வேறு தேசங்களிலிருந்து வந்த பல இனத்தவரிடமிருந்து நல்ல மரபுகளை கற்றுக் கொண்டு, நம்முடைய நல்ல மரபுகளை அவர்களுக்கும் கற்றுத் தந்திருக்கிறோம். இப்போது எல்லா இனங்களையும் விட, சுவிஸ் தமிழ்ச் சமுதாயம் ஒரு படி மேலே உயர்ந்திருக்கிறது. இப்போது அங்கு மக்கள் பிரதிநிதியாகும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது. அங்கு 50 ஆயிரம் பேராக உயர்ந்துள்ள தமிழர்களின் எண்ணிக்கை, இன்னும் 20 ஆண்டுகளில் 2 லட்சமாக உயரும். கடல் கடந்து சாதித்த தமிழர்களுக்காக பெருமைப்படுவதோடு, கடல் கடக்க முடியாத தமிழர்களின் கண்ணீரையும் நாம் துடைக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கிடையே தொடர்புப் பாலத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயலவேண்டும்.
Wednesday, September 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment