எமதினிய கவிப்பேரரசே
பிரவாகிக்கிறது வாழ்த்துக்கள்.
தமிழில் இதுவரை தோன்றிய
கவிதைகள் அனைத்துக்கும்
மகுடம் கவிப்பேரரசு கவிதைகளே
மரங்களைப் பாடுவேன் போதும்
மறு வார்த்தையே வேண்டாம்.
கவிப்பேரரசு தமிழின் வைரம்
பழகும் போது பட்டுத் தெறிக்கும்
ஒளியே வழியானால்
தாயொளியின் சக்தி முடிவிலிதான்.
.
வானம் எனக்கொரு போதிமரம்....
இன்னும் பிரஞ்ச வெளியிலிருந்து
சூட்சும அலையிலிருந்து
பறித்தெடுக்கும் கனிகளாய்
நெற்றிக்கண் கவனிக்கும்
உலகத்தமிழர்கள்.
செம்மொழி மாநாட்டு நாட்களில்
தாய் போலென்னைக் கவனித்த அன்பைத்
தன்னுடனே அழைத்து வந்திட்ட அக்கறையை
இனி இதயம் நிற்கும் வரை மறவேன்.
கவிஞர்கள் திருநாள் பெருநாளாக வெற்றி பெற
தமிழில் தோன்றிய தலைக் கவியே
உலகில் தோன்றிய உன்னத கவியே
உள்ளத்துக்குள்ளிருந்து ஊற்றாய்ப்
பிரவாகிக்கிறது வாழ்த்துக்கள்.
என்றும் கனிந்த அன்புடன்
டாக்டர் கல்லாறு சதீஷ்
13.07.2010,சுவிற்சர்லாந்து
Tuesday, July 13, 2010
இதிகாசக் கவி கவிப்பேரரசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆக்கம் Dr.கல்லாறு சதீஷ் at 4:44 AM 1 comments
Subscribe to:
Posts (Atom)