Thursday, October 7, 2010

புரிதலின் வலியது

புரிதலின் வலியது (சிறுகதை)

அவன் எப்பொழுதுமே பெண்களின் ஆடைகளையே அணிந்திருப்பான்.
ஏனென்று எனக்குப் புரிவதேயில்லை.
அந்த ஆடைகள் நவீனமாகவுமிருக்கும்,அது அவனுக்கு மிக அழகானதாகவுமிருக்கும்,
ஆனால்,
அவனேன் பெண்ணாடையணிகிறானேன்பதே எனது கேள்வியாகத் துரத்துகிறது.
அதை அவனிடம் கேட்கவோ,விளக்கம் பெறவோ நான் முயலவில்லை.
இதைப் பற்றிப் பலரிடம் நான் சொல்லியுள்ளேன்.
சிலர் சொன்னார்கள்,அவனின் காதலி இறந்திருக்கலாம்,
அதனால் அவளின் ஆடைகளை
அவன் அணிந்து வாழலாம்.
சில வேளை அவன் பைத்தியமாக இருக்கலாம்.
கண்ணீர் அஞ்சலியொன்றில் அவன் மரணமானதாக அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
மலர்வு 10.10.1990,பிரிவு 07.10.2010,நடராசா திவ்யா என்றிருந்தது.
திவ்யா ஆண் பெயரா பெண் பெயரா எனச் சந்தேகம் வந்தது.
அவனின் மரணச் சடங்கு நடக்கும் இடத்துக்கு ஒடிச் சென்றேன்.
அது அவன் அல்ல அவள் என்று அப்போதுதான் புரிந்து கொண்டேன்.

கல்லாறு சதீஷ் 07.10.2010