Thursday, January 29, 2009

நந்தவனத்தின் வந்தவனம்

வளவை துரையன் - கடலூர்


நந்தவனம் டிசம்பர் இதழ் வந்தது. சிற்றிதழ்கள் மீது மரபுக் கவிதையை ஆதரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்றைக் கூறி வருகிறார்கள். ஆனால் எப்போதும் தரமான மரபுகளை சிற்றிதழ்கள் ஆதரிக்கும் என்பதற்கு "வெற்று முழக்கம்" எனும் கவிதை எடுத்துக்காட்டு.. எப்பொழுதுமே கருமலை தமிழாழன் மரபில் சமூகக்கருத்துக்களைப் பாடுவதில் வல்லவர். புகையால் காற்று மாசடைவதால் ஓசோனில் ஓட்டைப் போடல், நதிகளில் கழிவு நீர் கலக்க வைத்தல், மரங்களை அழித்தல், பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துதல் ஆகிய சமுதாய சீர்கேடுகளை கவிதையில் மூன்று எண்சீர் விருத்தங்களை நன்கு காட்டியுள்ளார். கவிதையை வெளியிட்ட நந்தவனத்திற்குப் பாராட்டுக்கள்.

வேல் முத்தரசு - கோவை

கடும் சோதனைகளிலிருந்து மீண்டு, இன்று பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியிருக்கும் கல்லாறுசதீஷின் வாழ்வியல் தடங்களின் முன்னும் பின்னும் தடைகளாகவே இருந்திருக்கின்றது என்பது தற்சமயம் எழுத்தை ஆழ்கின்ற துறையில் அவரின் அக்கறையையும் நினைக்க ஆச்சரியமாயிருக்கின்றது. உழைப்புக்கும் நட்புக்கும், வெற்றிக்கும் அவர் காட்டுகிற அக்கறையும் தமிழக, இலங்கை மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் உட்பட அவருக்குப் போர்த்திருக்கும் பாராட்டு மழையும் அதிசயப்பட்ட வைத்தது..


கீதா முருகானந்தம் - திருவைகாவூர். தஞ்சை

டிசம்பர் 2008 இனிய நந்தவனம் கண்டேன். "வெற்றி பெறுவோம் என்ற குறிக்கோள் தமிழர்களுக்கு இருக்கிறது" சுவிட்சர்லாந்து கவிஞரும், எழுத்தாளருமான உலக அரங்கில் புகழ்பெற்று முத்திரை பதித்துவரும் கல்லாறு சதீஷ் அவர்களின் நேர்காணல், இளமையில் இலங்கையில்பட்ட துன்பங்கள், உடலில் மாறா காய அடையாளங்கள் இவையே ஓர் புரட்சிமிக்க சிந்தனையாளராக உருவாக்கியிருக்கிறது. இவையே இனிய நந்தவனம் வாசகர்களுக்கும் ஏனைய தமிழ் அன்பர்களின் மனசிந்தனைகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் என்றால் மிகையில்லை. ஆனால் நம் இனிய நந்தவனம் வாசகர்களை திருச்சிக்கு அழைத்து அறிமுகம் செய்திருக்கலாம். டிசம்பர் 08 இனிய நந்தவனம் இவரது புதுமையான பதில்களை தந்திருந்தார். நந்தவனத்தில் இவரது கருத்துக்களை படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. கேள்விகளை சிறப்பாக கேட்டது மிக நன்று.


பிச்சை மொகைதீன் - திருச்சி.

அன்பு நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு, சரியான ஒருவரான கல்லாறு சதீஷ் அவர்களுக்கு சிறப்பான ஒருவருக்கு தர வேண்டிய சிறப்பை சிறப்பித்துவிட்டு சிறப்பித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி அறிந்த பெரியவர்களின் கட்டுறையை வாங்கி வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பு. அவரின் வாழ்க்கை கவிஞர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மாணவச் சமுதாயம் இதைப் படிக்க வேண்டும் உணர வேண்டும்" என்றைக்காவது ஒருநாள் உன் கடிதமும் என் சரியான முகவரியைத் தேடிவரும்" வரிகள் எதிர்மறையாக நிறைவேடட்டும். வானம் தன் அந்தரத்து ராணிகளுடன் விளையாட கருவம் கட்டிக்கொண்டது வரிகள் கவிஞர் பீர். முஹம்மது அவர்களின் கவிதை வீரம். கவிஞர் வ.ம. குலேந்திரன் கவிதை சில்லென்று குளிர வைத்தது. கவிவனத்தில் உலகம் காட்டப்பட்டுள்ளது. ஆங்கரை பைரமியின் நூல் விமரிசனம் அருமை. தனிமையும் நட்பும் அருமை. துளிப்பாவனம் நந்தவனம் இதழே சிறப்பு இதழ்தான். (மாத இதழில் செய்திகள் அதிகம்)


குடத்தை பரிபூரணன்

கல்லாறு சதீஷ் அவர்கள், நண்பர் ஸ்ரீஸ்கந்தராஜா கூறியதைப் போன்று கிந்தி நடிகரைப் போல் வாட்டசாட்டமாகத்தான் இருக்கிறார். பெண்களும் பிள்ளைகளும் இபப்டி உடல் வாகோடு வளார்வதைக் கண்டு பெற்றோர்கள் பூரித்துப் போவார்கள் என எண்ணினீர்கள் என்றால் அது பிழை. அவர்கள் வயிற்றில் அமிலத்தைக் கட்டிக்கொண்டு இருப்பார்கள். சிங்கள ராணுவம் வாளிப்பான ஆண்களையும் பெண்களையும் கண்டால் கொத்திக்கொண்டு போய்விடுவார்கள். புலி என சித்திரவதை செய்துபோடும். பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். யானைக்கும் குதிரைக்கும் 100 முழம் எட்டி நின்றால் போதும் தப்பலாம். சிங்கள காவல் படையின் கண்ணுக்குப் படாமல் ஒளிந்து போக வேண்டும். இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் இமயமென உயர்ந்து நிற்கிறார் நம் கதாநாயகன் என்றால் அதற்காக அவர்பட்ட சிரமங்களை ரத்தம் வடியும் நினைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ் உணர்வு உள்ளவர்கள் கல்லாறு சதீஷ் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. நந்தவனமும் அதைத்தான் செய்திருக்கிறது. கல்லாறு எடுத்துக் காட்டாக விளங்கும் தமிழ் மறவன் வாழ்க அவர் புகழ்..



சை. பீர். முஹம்மது


அன்பு நண்பர் நந்தவனம் சந்திரசேகருக்கு அன்பு வணக்கம்!. தங்களின் டிசம்பர் 2008 இதழ் கிடைத்தது. படித்தேன். நுழைவாயிலில் தாங்கள் கூறியது போல ஆசிரியப்பணி ஆக்கப்பணி என்பது எவ்வளவு ஆழமோ அதுபோல மாணவப்பருவமே வாழ்க்கையின் மகத்தான பருவம் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டப்புத்தகங்களை தூக்குவதை விட்டுவிட்டு உருட்டுக் கட்டையையும் இரும்புச் சட்டங்களையும் கத்தியையும் தூக்குவது வேதனை! பொருளாதார நெருக்கடியில் பெற்றோர்கள் மாணவர்களை கல்லூரிக்கு அனுப்புவது என்பது அனுபவமான பட்டறிவு. இதனை மறந்துவிட்டு வன்முறையில் ஈடுபடுவது அழகல்ல. அவர்கள் வீடு மட்டும் அல்ல நாடும் அவர்களை நம்பியிருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு உண்மை எல்லா மாணவர்களும், மாணவர்களைப் பெற்றவர்களும் சிந்திக்க வேண்டிய விசயம்! முள் குத்தாமல் புதிய பாதைகள் அமைக்க என்னும் வரியினை உள்ளக்கிய கவிதை சாவு எங்களுக்கு வேர்வைத்துளி என்பதனை நாமும் கண்டுவரும் செய்தியினை படம் காட்டியுள்ளார்.


பாகமணி
செய்திக்கனல் இதழாசிரியர். திண்டுக்கல்


கல்லாறு சதீஸ் தாம் எவ்வாறு கவிஞாக படைப்பாளியாக வந்தது குறித்த நேர்காணல் நெஞ்சை உருகச் செய்தது. நல்ல பண்பாளரை அறிமுகப்படுத்தி எல்லோரும் அறிந்திட செய்த இனிய நந்தவனத்திற்கு இன்முகத்தோடு செய்திக்கனல் வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறது



டி.எம் சிவரஞ்சனி. திருவாரூர்



டிசம்பர் மாத இனிய நந்தவனம் படித்தேன். தினம் தினம் வாழலாம் வாங்க.....! கட்டுரைப் படித்தேன் மனித வாழ்க்கையின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையின் அர்த்தம் எண்ணி எண்ணி வாழ்வதின் பயன் வாழ்வின் மனித நேயம் வாழ்வின் ஒற்றுமை இவற்றை மனிதன் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்களை கட்டுரையாளர் த்ரு கவிஞர் லெனா அவர்கள் தெள்ளத் தெளிவாய் உணர்த்தியிருக்கிறார். வாசகர்களுக்கு நல்ல படிப்பினை நல்ல பண்பினை உணரச் செய்த இனிய நந்தவனத்துக்கும் கவிஞர் லேனா அவர்களுக்கும் மனம் நிறைஐந்த பாராட்டுக்கள் மனம் நிறைந்த நன்றிகள்.


சரஸ்வதி பஞ்சு. திருச்சி.


டிசம்பர் 2008 இதழை படிக்க நேர்ந்தது. உலகத்தமிழர்களிடையே உலாவரும் மக்கள் மேம்பாட்டு மாத இத என்பதை ஒவ்வொரு மாதமும் இனிய நந்தவனத்தில் மலரும் பூக்கள் மனத்தோடு மிளிர்கின்றன. கல்லாறு சதிஸ் உடன் ஒருநாள் பேட்டி மற்றும், அவரைப் பற்றிய பல்வேறு படைப்பாளிகளின் சிந்தனைச் சிகரங்கள் அருமை. மேலும் பூக்கள் மலர வாழ்த்துகிறேன்.


செல்வி. கு.டீ. புரட்சிமணி. குடந்தை

நுழைவாயில் வருங்கால வளர்பிறைகளுக்கு நன்கு உணர்த்தியுள்ளீர்கள். நந்தவனம் சந்திரசேகர் கருத்துக்கள் வாழ்வில் வெற்றிபெற விரும்புவோருக்கு நல்லகையேடு கல்லாறு சதிஸ் பற்றிய செய்திகள் யாவும் காலப் பெட்டகம்.




கவியருவி. மதியழகன் கரடிபட்டி.


கல்லாருசதீஷ் பற்றிய இனிய நந்தவனம் சிறப்பு இதழ் சிந்திக்க வைத்தது. இலங்கையில் பல இன்னல்களுக்கு ஆளான அவர் சுவிஸ் நாட்டுக்குச் சென்று அந்த உணவுக்குஅ மாற வேண்டிய சூழ்நிலையிலும் அதற்கு ஏற்றபடிமாறி இன்று தமிழ் இலக்கிய உலகில் நல்ல இடம் பிடித்து இருப்பது அவரும் பாறையில் செதுக்கிய சிலைபோல் தமி நெஞ்சங்களில் நீங்காமல் நின்று வாழ்கின்றார் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.

லால் சந்திரன் லால்குடி


வெற்றி பெறுவோம் என்ற குறிக்கோள் தமிழர்களுக்கு இஎஉக்கிறது. புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் கல்லாறு சதிஸ் நேர்காணல் படித்தேன். என்னை மெய் சிலிர்க்க வைத்தது. தமிழர் மீது அவர் வைத்துள்ள நபிக்கையும் தமி மீது வைத்துள்ள பாசமும் என்னைப் போன்ற தமிழ் பற்று உள்ளவர்கலுக்கு படைப்புக்கள் எழுதும் எழுத்தாளர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். தோழருக்கு நன்றி. ஆசிரியருக்கும் நன்றி


செல்வராஜா - சேலம்

டிசம்பர் இனிய நந்தவனம் இத மிகவும் சிறப்பாக இருந்தது. கல்லாறு சதீஸ் அவர்களின் நேர்காணல் அவரது பல பரிணாமங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அறிவு சான்றோர்களின் வாழ்த்துரைகள் சதீஸ் அவர்களின் நற்பண்புகளை நமக்கு விளக்கியது. கவிஞர் மஞ்சுளா, பீர் முகம்மது ஆகியோரின் கவிதைகள் நன்று.


பரிசுபெறும் கடிதங்கள்


ராக்கி மகேஷ். கோவை

நந்தவனத்தின் நுழைவாயிலில் ஆசிரியரின் "கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு உட்காருவான்" என்று ஆரம்பத்திலிருந்து....... வெற்றியொன்று முழங்குகிறாய்" என்று முடிக்கும் பாவலர் கருமலைத் தமிழாழன் ஐய்யா அவர்களின் முடிவுரை வரையிலும் அருமை.... அருமை.. வெற்றி என்பது உன் வீட்டைத் தேடிவருவதல்ல.. சந்தோசமாக வரவேற்க... இப்படி நறுக்கென்று வெற்றியின் பிரசவத்தைப் பார்த்த மருத்துவராக கவி பெரியசாமியையும் உங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் வாழ்க்கையோடு ஒப்பிடாதீர்கள்.. உங்கள் சந்தோசத்தின் மூலதனம் நீங்களே..... இப்படி சீரிய கருத்துக்களை கொணர்ந்த கவிஞர் லெணா அவர்களையும் உனது கையும் ஒருநாள் ஓங்கி நிற்கும் திரும்பிப் பார். எனக்குப் பின்னால் பலர் இருப்பார்கள் முயற்சி செய்...... என்று நம்பிக்கையூட்டும் முகமாக திருச்சி, சுகாசினியின் கருவும் இதழை மெருகூட்டியது...... தமிழ்மொழி சுவாசமாக இருக்கவேண்டும். பிறமொழிகள்.. ஆகாரம் போல் இருக்கலாம் என்று ஈழக்கவிதாசன் மா, ஞானசூரியின் தமிழ்ப்பற்று மெய்சிலிக்க வைக்கிறது. அனைத்துக்கும் மேலாக.. ஈழக்கைதியாய், சிறைக்கைதியாய், சிறைப்பறவையாய் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் தனக்கென்று ஒரு பாணியில் தன்னகரில்லா தமிழ் புத்தனாக இலக்கியவாதியாக ஜெர்மன் மொழியில் இவரது கதையை மொழி பெயர்த்து வைக்கும் அளவுக்கு அறிஞராக முத்திரை பதித்த கல்லாறு சதீஷ் அவர்களுடைய செயலாற்றலை பட்டி தொட்டிஎல்லாம் பரவும் டெங்கு காய்ச்சல் போல் புகழை எட்டுத்திக்கும் பரவச் செய்து பாமரர்க்கும் புரியும் வண்ணம் அழகிய அட்டைப் படத்தில் முப்பரிமாணமாய் ஜொலிக்க வைத்து அவரது சாதனைகளையும் சோதனைகளையும் இதழில்ச் எதுக்கிய பாங்கு நந்தவனத்துக்கு ஒரு மணிமகுடம். ஆம் 2008க்கான சான்று.. விடிவெள்ளியாய் திகாவேண்டியவர்கள் கூழாங் கற்களாய் தேய்கிறார்களே.. என்று கவிப்பேரர்சு வைரமுத்துவின் வரிகளைப் படிக்கும்போது நெஞ்சு கனக்கிறது.... பதிப்பகதுறையில் சாதனை படைத்து உலா வரும் லேனா, தமிழ்வாணன், ரவி தமிழ்வாணன் சகோதரர்கள். இவர்களின் பேரன்பைப் பெற்ற கல்லாறு சதிஷ் என படிக்கும்போது இவ்வளவு விஷயங்களை இந்த மாத இதைல் தந்து.. ஆசிரியர் நம்மை அசத்தியிருக்கிறார்.. மேலும் புத்தாண்டில் மேலும் பல சாதனையாளர்களைக் கண்டு அடையாளம் காட்ட "நந்தவனம்" இதழையும் ஆசிரியையும் பாராட்டுகிறேன்.


கா. இரா. குப்புதாசு. செஞ்சி

ஐய்யா வணக்கம் இனிய நந்தவனம் டிசம்பர் 2008 இதழ் நுகர்ந்தேன். நாளைய உலகை ஆளப்போகும் நம்பிக்கை நட்சத்திரங்கள் தங்களை உணரவேண்டும் அவர்களை நம்பியே எதிர்கால சமுதாயம் உள்ளது என்ற நுழைவாயில் அறைகூவல் சமுதாய பொறுப்புணர்வின் வெளிப்பாடு. நெப்போலியனின் தெளிவான சிந்தனை எல்லா வெற்றியும் எளிதாக வரும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு. வேதனையை சாதனையாக்க இளைஞர்கள் வீறுநடைபோட வேண்டும் என்ற கருத்து புது ரத்தம் பாய்ச்சட்டும், நட்புக்கு இலக்கணம் வகுத்த கல்லாறு சதீஷ் குறித்த செய்திகள் புதிய உறவு ஒன்றை வாசகர்களுக்கு தந்தது. எங்கள் தமிழரும் இனி நீடூழி வாழ்க நன்றே" என்ற நன்னெறியில் நடைபோடும் இந்த அறிமுகமே அச்சாரம் கூறும் சிப்பிக்குள் முத்தான வெளியுலகுக்கு கொணர்ந்தமைக்கு ஓராயிரம் நன்றி. சூர்யமதியின் கவிவனத்தில் உலகம் இதுதான் என்பதை உணர முடிந்தது. காட்டிக் கொடுக்கும் கருங்காலிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதனை பீர்முகம்மதுவின் கவிதை தோலுரித்துக் காட்டியது. ஒவ்வொருவரின் சந்தோசத்திற்கும் மூலதனம் அவர்களே தான் என்ற கவிஞர் லெனாவின் கூற்று ஓராயிரம் உண்மை கூறியது. எல்லோரும் நல்லவரே என்ற எண்ணமே வளமை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லும் என்பதான ம. திருவள்ளுவர் அழகு தமிழில் சொல்லியுள்ளார்.


வி.சுப்பிரமணியம், பி. கொமாரபாளையம்

கல்லாறு சதீஷ் புன்னகையுடன் வெளிவந்த இனிய நந்தவனம் இத கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. கல்லாறு சதீஷின் நேர்காணல் மிகவும் அருமையாகவும், பயனுள்லதாகவும் இருந்தது. சட்டக்கல்லூரியில் நடந்த வெறியாட்டத்தைப் பற்றி ஆசிரியரின் தலையங்கம் சிந்திக்க வைத்தது. சை.பீர்முகம்மதுவின் "சாவு எங்களுக்கு வேர்வைத்துளி" கவிதை அருமை. கோல்டு ஈகிள் அப்ளையன்சஸ் நிறுவனம் நடத்திய தீபாவளி சிறப்பு பரிசளிப்பு விழா தொகுப்பும், புகைப்படங்களும் நன்றாக இருந்தது. மேலும் இதழில் வெளிவந்த அனைத்து பகுதிகளும் நன்றாக இருந்தது. தொடரட்டும் இனிய நந்தவனத்தின் இலக்கியப் பணி.



கவிஞர் இரா. இரவி - மதுரை

தலையங்கம் சென்னை அம்பேதகர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரவுடிகளை மிஞ்சும் அளவிற்கு மோதிக் கொண்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு கண்டனத்தை உரக்கப் பதிவு செய்தது சிறப்பு. தங்களின் இனிய நண்பர் கல்லாறு சதீஷ் சிறப்பித கனமாக இருந்தது. அதே நேரத்தில் இதயத்தைக் கனமாக்கியது. ஈழத்தமிழர்களின் வாழ்வில் நடந்த கொடுமைகளையும் புலம் பெயர்ந்த வாழ்வின் இன்னல்களையும் புலம்பெயர்ந்த சோகத்திலும் இலக்கியம் வளர்க்கும் இனிய மனிதர்களின் உஐப்பையும் உணரும் விதமாக சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள் சிகரங்கள் சித்திரங்கள் தொடர் புரட்சிப் பெண் காவல் அதிகாரி கிரண்பேடி பற்றியும் மாவீரன் நெப்போலியனின் சுறுசுறுப்பு பற்றியும் எடுத்துக் கூறி தன்னம்பிக்கை விதைவிதைத்து கவிதைகள் சிந்திக்க வைத்தது.


அந்தோணிராஜ் - திருச்சி

டிசம்பர் மாத இதழ் முற்றிலும் மாற்றத்துடன் கல்லாறு சதீஷ் அவர்களின் சிறப்பிதழாக வெளிவந்தது மகிழ்ச்சி. வளர்ந்துவரும் என்போன்ற ஆரம்பக் கட்ட எஉத்தாளர்களுக்கு அவரை(கல்லாறு சதீஷ்) அறிமுகப்படுத்தி வைத்தது போல் இருந்தது. மிகப்பெரிய சாதனையாளரை என் போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அவரோடான தங்கள் உரையாடல் நாங்களே பங்குபெற்றது போல இருந்தது. வாசகர் படைப்புக்கள் அனைத்தும் சிறப்பாய் இருந்தது. நினைவுகள் தொலைத்த இடம் மு செயலா அவர்களின் கவிதை இதயத்தை ஏதோ செய்தது. வாசகர் கடிதங்கள் கூட கவிதைகள் போல சுவையாக இருப்பது நம் நந்தவனத்தில் மட்டுமே. உண்மைதான். எழுதுகோலின் ஏக்கம் உண்மைதான். கண்ணதாசன் அவர்களின் கவிதை இன்றைய பத்திரிகையாளர்களின் நிலையை காட்டியது. கடமைக்காக கவிதைகள் வெளியிடும் இதகளுக்கு நடுவே டிசம்பர் இதழில் வெளிவந்த அனைத்து கவிதைகளும் ஒவ்வொரு விதமாய் அசத்தியது. சூரியமதி அவர்களின் இதுதான் உலகம்" கவிதை ரொம்ப நேரம் யோசிக்க வைத்தது. கல்லாறு சதீஸ் சிறப்பிதழ் மட்டுமல்ல. கவிதை சிறப்பிதழ் எனவும் சொல்லலாம். உண்மையாகவே இம்மாத இதழ் காகித பூவின் தேன் துளிகள், கண்னாடி சித்திரங்கள் போல் பாதுகாத்து வைக்கவேண்டிய பொக்கிஷம். பொங்கல் சிறப்பிதழ் சிறாப்பாய் அமைய அன்புடன் வாழ்த்துகிறேன்.


கருமலைத் தழிழாழன். ஓசூர்

படத்துடன் என் கவிதையை வெளியிட்டமைக்கு நன்றியினை உரித்தாக்குகிறேன். "மாணவர்கள் நலன் கருதி எழுதப்பட்ட தலையங்கம் ஒவ்வொரு மாணவனும் மனதில் பதித்து படிப்பிலே கவனம் செலுத்தினால் வீடும் நாடும் நன்மைகள் பல பெறும்".



புலவர் ஞானசேகரன் - திருலோக்கி


விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எல்லா வெற்றியும் எளிதாகவே வரும் என்பதற்கு நெப்போலியனை முன்னிறுத்தி அவர் வழிமுறைகளையும் பிற சான்றுகளையும் எடுத்தியம்பியுள்ள ஆசிரியரின் பதிவுகள் சோம்பேறிகளையும் "சுரீர்" எனத்தட்டி எழுப்பும். ஈழ மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து குளிர் நிலத்தில் வெற்றிக்களம் அமைத்து நம் நெஞ்சங்களை குளிர்விக்கின்ற கல்லாறு சதீஷைப் பற்றி பன்னாட்டவரிடையே நம் நாட்டவரும் தந்துள்ள இழையோடல்களும் ஆசிரியரின் நேர்காணலில் மலர்ந்த மண்ணின் மணமும் அள்ளித்தந்த செய்திகள் உள்ளத்தில் ஆழப் பதிந்து வேரூன்றின. சிங்கள வெறியர்களால் 18 ஆண்டுகட்கு முன்பு சிறைப்படுத்தப்பட்ட தமிழ் இளைஞராம் சதீஷின் கதறலும் கண்ணீருந்தான் அவருடைய உயர்வுக்கும் புகழுக்கும் வித்திட்டு நீராகவும் உரமாகவும் பயன்பட்டு வளர்ந்திருக்கின்றது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஈழ மண்ணை விட்டு புலம்பெயர்ந்த போது தாயகத்தை விட்டாரேயன்றி நம் மொழியை விடமொழியை விடவில்லை என்பதே நமக்குப் பெருமை.

0 comments: