Wednesday, January 7, 2009

கல்லாறு சதீஷ் என்றவுடன் பல நினைவுகள்! -மின்தமிழ் Narayanan Kannan

Narayanan Kannan
Profil anzeigen

கல்லாறு சதீஷ் என்றவுடன் பல நினைவுகள்!
வடிவான துடிப்புள்ள இளைஞர். சமூகப்பொறுப்பும், தமிழ் ஆர்வமும் மிக்க இளைஞர். தன்மீதும், தாம் வாழும் சுவிஸ் தமிழ் சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை வைத்து தன் உழைப்பால் வளர்ந்த இளைஞர். தமிழ் வளர்த்த சான்றோர் என்று சரிதம் எழுதும் நாம் என்றாவது ஓர் நாள் ஆதரவற்ற நிலையில் வேர் பிடுங்கப்பட்டு வேற்று நிலத்தில் விதைக்கப்பட்டும் வளர்ந்து செழிக்கும் தமிழர் பற்றி எழுத முற்படுவோம். அதுவோர் புதிய சரித்திரமாக இருக்கும். எம்.எஸ்.உதயமூர்த்தி, சுகபோகானந்தா போன்றோர் பேசும் பேச்சை செயலாக்கிய பலர் இன்று ஐரோப்பிய மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழ்க்கை வரலாறு பதியப்பட்டால் பாரதிதாசன் பேசும் "புதியதோர் உலகம்" படைப்பதற்கான உத்வேகம் கிடைக்கும்.
வாருங்கள் சதீஷ்!

Dr.Narayanan Kannan

0 comments: