2.விழுதல் என்பதும் எழுகையின் வடிவமே!!!
நான் மட்டும் போகவில்லை.
எனக்கு மட்டும் இந்தச் சோகம் இல்லை.
போக முடிந்த எல்லோரும் இலட்ச இலட்சமாய்ப் போனார்கள்.
போவதற்காக இலட்ச இலட்சமாய்ப் பணம் கொடுத்துப் போனார்கள்.
எனக்கு எங்கே போவதென்று தெரியாது.
எப்படிப் போவதென்றும் தெரியாது.
பலர் போகும் திசையில் நானும் போகிறேன்.
இது பெரும் பயணம்.
சட்டரீதியான பயணம் அல்ல.
ஆபத்துக்கள் நிறைந்த பயணம்.
விமானத்திலிருந்து முதன் முதலாய்
இன்னுமொரு தேசத்தைப் பார்க்கிறேன்.
அது அழகாக இருந்திருக்க வேண்டும்.
பச்சைப் புல்வெளிகளும், அழகிய கட்டிடங்களுமாய்,
மனதைக் கிளர்ச்சி கொள்ள வைத்திருக்க வேண்டும்.
ஆனால் எனக்கு அப்படியேதும் நடக்கவில்லை.
எத்தனை பேரிடம் இந்தப் பயணத்துக்காகப் பணம் வாங்கினேன்.
இறுதி நேரப் பிரிவின் போது,
உறவுகளின் எத்தனை கேள்விகளை எதிர் கொண்டேன்.
இதயம் நொறுங்க விடைபெற்றேன்.
உயிரைக் காக்க எத்தனை வலிகள்.
இவ் வாழ்வில்.
எங்கேனும் ஒரு தேசத்தில் புகலிடம் தேட வேண்டும்.
சரியாகப் புகலிடம் பெற யார் சொல்லித் தருவார்கள்?
செய் முறை படித்துச் செயல் என்பதை விட,
செயலூடகச் செயல்,
செய்துதான் பார்ப்போமே.
புதிய தேசத்தில்
தங்கும் விடுதியில் இன்னும் பலருடன்
நானும் தங்கவைக்கப் படுகிறேன்.
ஐரோப்பிய தேசம் நோக்கிப் போக வேண்டும்.
மீண்டுமொரு சோகம் தாக்காத வாழ்வைத் தேட வேண்டும்.
இந்தப் பயணப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.
யாருக்காகவோ காத்திருக்கச் சொன்னார்கள்.
நீண்ட நாட்களில் இன்னும் அவர் வரவேயில்லை.
Monday, January 19, 2009
2.விழுதல் என்பதும் எழுகையின் வடிவமே!!!
ஆக்கம் Dr.கல்லாறு சதீஷ் at 12:58 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//விழுதல் என்பதும் எழுகையின் வடிவமே!!!//
மனதைத் தொடும் பதிவு.
அன்புடன் அருணா
நண்பர் கல்லாறு சதிஷ் அவர்களே ,
எனது பெயர் ஏ சுகுமாரன் , தாங்கள் ஒரு முறை என்னுடன்
தொலை பேசியில் பேசினீர்கள் ,இடையில் துண்டிப்பு . ஆனால்
எனக்கு ஒரு மினஞ்சல் geswar@yahoo.காம் தங்கள் வலை பூ பற்றி தெரிவித்து
வந்தது . நானும் தங்களிடம் கூறியபடி தினசரி செய்தி சில நாட்கள்
அனுப்பினேன் .
எனது மினஞ்சல் amirthamintl@gmail.com
தயவு செய்து தொடர்பு கொள்ளவும்
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
Post a Comment